இந்தியா

கடைசி நேரத்தில் தெரியவந்த தொழில்நுட்ப கோளாறு.. ஏர் இந்தியா விமானம் அவசர நிறுத்தம்!

Published On 2025-06-15 17:14 IST   |   Update On 2025-06-15 17:14:00 IST
  • ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டது.
  • சிரமத்திற்கு வருந்துகிறோம் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள இண்டன் விமான நிலையத்திலிருந்து மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவுக்குச் செல்லவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் IX 1511, இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தாமதமானது.

விமானம் புறப்படுவதற்கு சற்று முன்பு ஓடுபாதையில் இருக்கும்போது எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டது.

"எங்கள் இண்டன்-கொல்கத்தா விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தாமதத்துடன் இயக்கப்பட்டது. பயணிகள் இலவச மறு பயணம் அல்லது முழு பணத்தைத் திரும்பப் பெறுதல் ஆகிய விருப்பங்கள் வழங்கப்பட்டன. சிரமத்திற்கு வருந்துகிறோம்" என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Tags:    

Similar News