இந்தியா

மேற்கு வங்காளத்தில் புதிதாக தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரெயில் மீது மர்மநபர்கள் கல்வீச்சு

Published On 2023-01-03 11:11 IST   |   Update On 2023-01-03 11:53:00 IST
  • கல்வீச்சில் ரெயிலின் ஒரு பெட்டியின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது.
  • ரெயில் சேவை தொடங்கி 4 நாட்களில் கல்வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா-ஜல்பைகுரி இடையே புதிய வந்தே பாரத் ரெயில் சேவையை கடந்த மாதம் 30-ந்தேதி பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த ரெயில் நேற்று குமார் கஞ்ச் என்ற ரெயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது அங்கு மறைவான இடத்தில் இருந்த மர்மநபர்கள் அந்த ரெயில் மீது சரமாரியாக கற்களை வீசினார்கள்.

இந்த கல்வீச்சில் ரெயிலின் ஒரு பெட்டியின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது. இதனால் அந்த ரெயிலில் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக கல்வீச்சு சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார்? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்வீச்சு கும்பலை தேடி வருகின்றனர். இந்த ரெயில் சேவை தொடங்கி 4 நாட்களில் கல்வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News