இந்தியா

இன்ஸ்டாகிராமில் வைரல்- இளம்பெண்ணை பார்த்து நடனம் ஆடும் யானை

Published On 2023-04-21 15:29 IST   |   Update On 2023-04-21 15:29:00 IST
  • சமூக வலைதளங்களில் பிரபலமானவராக திகழும் வைஷ்ணவி நாயக் யானை முன்பு நின்று உடல் அசைவுகளுடன் கூடிய நடனம் ஆடுகிறார்.
  • வைஷ்ணவி நாயக் அசைவுக்கேற்ப யானையும் தலையை ஆட்டியபடியும், நடனம் ஆடியும் அசத்திய காட்சிகள் காண்பவர்களை கவர்கிறது.

விலங்குகள் தொடர்பாக சில வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி விடும். அந்த வகையில் இளம்பெண் ஒருவர் நடனமாடுவதை பார்த்து ஒரு யானை நடனமாடும் வீடியோ இன்ஸ்டாகிராமில் பரவி வருகிறது. அந்த வீடியோ உத்தரகாண்டில் ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில், பூங்காவிற்கு பார்வையாளராக வைஷ்ணவி நாயக் என்ற பெண் சென்றுள்ளார். சமூக வலைதளங்களில் பிரபலமானவராக திகழும் அவர் யானை முன்பு நின்று உடல் அசைவுகளுடன் கூடிய நடனம் ஆடுகிறார். அவரது அசைவுக்கேற்ப யானையும் தலையை ஆட்டியபடியும், நடனம் ஆடியும் அசத்திய காட்சிகள் காண்பவர்களை கவர்கிறது.

பின்னணி இசையுடன் சேர்ந்து இந்த வீடியோவை வைஷ்ணவி நாயக் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அது இசைக்கேற்ப யானை நடனம் ஆடியது போன்று அமைந்திருப்பதால் லைக்ஸ்களை குவித்து வருகிறது. இதுவரை 17 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் விருப்பங்களை பெற்றுள்ளது.

Tags:    

Similar News