இந்தியா

விவாதத்தை ஏற்படுத்திய காமெடி நடிகையின் பேச்சு

Published On 2023-10-24 16:23 IST   |   Update On 2023-10-24 16:23:00 IST
  • வீடியோ வைரலாகி இணைய பயனர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை சந்தித்தது.
  • தொடர்ந்து பல எதிர்ப்புகள் வந்ததை தொடர்ந்து சர்ச்சைக்குரிய வீடியோ யூடியூப்பில் இருந்து நீக்கப்பட்டது.

இந்தியாவில் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிகள் பிரபலமாகி வருகின்றன. வலைதள பயனர்கள் பலரும் தங்களது ஓய்வு நேரங்களில் இந்த ஸ்டாண்ட் அப் வீடியோக்களையும், நகைச்சுவை நிகழ்ச்சிகளையும் பார்க்கின்றனர். சில நிகழ்ச்சிகளை நேரலையில் காண பலரும் டிக்கெட் முன்பதிவு செய்கிறார்கள். சில நேரங்களில் நகைச்சுவை நடிகர்களின் காமெடிகள் பார்வையாளர்களை பெரிதும் கவரும் வகையில் உள்ளது.

ஆனால் யூடியூப்பில் வெளியான காமெடி நடிகை ஒருவரின் ஸ்டாண்ட் அப் வீடியோ இணையத்தில் கடும் விமர்சனங்களை சந்தித்தது. அந்த வீடியோவில் விதுஷி ஸ்வரூப் என்ற காமெடி நடிகை, விபசாரத்தை கூலான தொழில் என முத்திரை குத்தி பேச தொடங்குகிறார். அவர் அந்த தொழிலில் உள்ள அனுபவம் மற்றும் மற்ற தொழில்களில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.

இந்த வீடியோ வைரலாகி இணைய பயனர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை சந்தித்தது. இதில் நகைச்சுவை எங்கே உள்ளது? வெறுப்பை தவிர வேறு எதையும் நான் உணரவில்லை என்று ஒரு பயனரும், இப்படி ஒரு அவமானம் என மற்றொருவரும், படிக்காத முட்டாள்கள் மட்டுமே விபசாரத்தை கேலி செய்ய முடியும் என ஒரு பயனரும் கருத்துக்களை பதிவிட்டிருந்தனர். தொடர்ந்து பல எதிர்ப்புகள் வந்ததை தொடர்ந்து சர்ச்சைக்குரிய இந்த வீடியோ யூடியூப்பில் இருந்து நீக்கப்பட்டது.

Tags:    

Similar News