இந்தியா

மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஐ.நா சபை பொதுச் செயலாளர் மரியாதை

Published On 2022-10-19 07:29 GMT   |   Update On 2022-10-19 07:29 GMT
  • போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமரான இவர், கடந்த 2017-ம் ஆண்டு ஐ.நா. சபை பொதுச் செயலாளராக பதவியேற்றார்.
  • இந்தியா வந்துள்ள ஐ.நா.சபை பொது செயலாளர் பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோரை சந்திக்கிறார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரான அன்டோனியோ குட்டெரஸ் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமரான இவர், கடந்த 2017-ம் ஆண்டு ஐ.நா. சபை பொதுச் செயலாளராக பதவியேற்றார்.

தொடர்ந்து ஜனவரி 1, 2022ம் ஆண்டு முதல் இரண்டாவது முறையாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஐ.நா.சபை பொது செயலாளர் பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோரை சந்திக்கிறார்.

இதற்கிடையே, ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் தனது மூன்று நாள் இந்தியா பயணத்தின் முதல் நாளான இன்று மும்பையில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலில் 26/11 பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது துணைத் தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோருடன் குட்டெரெஸ் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Tags:    

Similar News