இந்தியா

சத்தீஸ்கரில் லாரி மீது கார் மோதிய விபத்தில் இருவர் பலி- 3 பேர் காயம்

Update: 2022-06-29 10:51 GMT
  • வீரேந்திரா, ராஜேந்திரா மற்றும் ராகேஷ் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
  • டிரக் டிரைவர் வினய் யாதவ், பல்வேறு பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பாவிலிருந்து 350 கி.மீ தொலைவில் உள்ள சூரஜ்பூர் மாவட்டம் பிரேம்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாரா சோதனைச் சாவடிக்கு அருகில் லாரி மற்றும் கார் மோதி விபத்துக்குள்ளானது.

துர்க் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உ.பி மாநிலம் கோரக்பூரில் இருந்து காரில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தனர். காலை 5.30 மணியளவில் கார் சோதனைச் சாவடி தடுப்புச் சுவரை அடைந்தபோது, எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரில் இருந்த சபாபதி யாதவ் (53) மற்றும் ஹரேந்திர யாதவ் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வீரேந்திரா, ராஜேந்திரா மற்றும் ராகேஷ் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக அம்பிகாபூர் நகரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக அதிகாரி கூறினார்.

இதையடுத்து, டிரக் டிரைவர் வினய் யாதவ், பல்வேறு பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News