இந்தியா

டெல்லி குடியரசு விழா அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி

Published On 2023-01-26 06:27 GMT   |   Update On 2023-01-26 06:27 GMT
  • ராணுவ பிரிவில் முப்படைகளுடன் குதிரை படை மட்டுமின்றி ஒட்டக படையும் இடம் பெற்றது.
  • சங்க காலம் முதல் தற்காலம் வரை பெண்களின் பங்களிப்பை விளக்கும் வகையில் தமிழ்நாடு ஊர்தி இடம்பெற்றிருந்தன.

நாட்டின் 74வது குடியரசு தின விழா கொண்டாப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள கடமைப்பாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார். அதன் பிறகு அணி வகுப்பு காலை 10.30 மணிக்கு தொடங்கியது.

ராணுவ பிரிவில் முப்படைகளுடன் குதிரை படை மட்டுமின்றி ஒட்டக படையும் இடம் பெற்றது. கடற்படையில் 144 இளம் மாலுமிகள் பங்கேற்றனர். முதல் முறையாக 3 பெண் அதிகாரிகளும், 6 அக்னி வீரர்களும் கலந்து கொண்டது சிறப்பாகும்.

இந்நிலையில், விழாவில் தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் தொடங்கியது.

இதில், தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியில், சமூக வளர்ச்சி, மேம்பாட்டில் பெண்களின் பங்களிப்பை விளக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியில், ஒளவையார், வேலுநாச்சியார் உருவங்கள் அலங்கார ஊர்தியின் முகப்பு பக்கத்தில் இடம்பெற்றிருந்தன. மேலும் இந்த ஊர்தியில், பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி, பரத நாட்டிய கலைஞர் பால சரஸ்வதி, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, மூவலூர் ராமாமிர்த அம்மையார் உருவங்கங்கள் இடம்பெற்றன.

சங்க காலம் முதல் தற்காலம் வரை பெண்களின் பங்களிப்பை விளக்கும் வகையில் தமிழ்நாடு ஊர்தி இடம்பெற்றிருந்தன.

Tags:    

Similar News