இந்தியா

டிச.10ம் தேதிக்குள் விமான சேவைகள் சரியாகும்..!- இண்டிகோ நிறுவனம்

Published On 2025-12-07 16:34 IST   |   Update On 2025-12-07 16:34:00 IST
  • உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் அனைத்து இண்டிகோ விமான சேவைகளை ரத்து செய்தது.
  • பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறோம் என பதிவிட்டது.

இண்டிகோ விமான நிறுவனம் கடந்த 4 நாட்களாக விமான சேவைகளை நிறைவேற்றுவதில் சொதப்பி வருகிறது. மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் பிறப்பித்த புது விதிகளை காரணம் காட்டி, பல்வேறு விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்து வருகிறது.

உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் அனைத்து இண்டிகோ விமான சேவைகளை ரத்துசெய்தது. சில இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக புறப்பட்டன. இதனால் பயணிகள் கடுமையாக பாதிப்பு அடைந்தனர்.

இதைதொடர்ந்து, இண்டிகோ நிறுவனம் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ரத்து செய்யப்பட்ட இண்டிகோ விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு விமான கட்டணம் தானாகவே திருப்பிச் செலுத்தப்படும் என அந்நிறுவனம் அறிவித்தது.

டிசம்பர் 5 முதல் 15ம் தேதி வரை பயணிகள் டிக்கெட் ரத்து செய்தல் அல்லது வேறு தேதிகளுக்கு மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளுக்கும் எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறோம் என பதிவிட்டது.

இந்நிலையில், இண்டிகோ விமான சேவைகள் வரும் டிச.10ம் தேதிக்குள் வழக்கம்போல இயங்கும் வகையில் சரிசெய்யப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

சேவைகள் முழுமையாக சரியாக 2026 பிப்.10 வரை ஆகும் என முன்னர் தெரிவித்திருந்த நிலையில், விரைவில் சரியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் சுமார் 650 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News