இந்தியா

கோவா தீவிபத்தில் 23 பேர் பலி- பிரதமர் மோடி இரங்கல்

Published On 2025-12-07 07:25 IST   |   Update On 2025-12-07 07:25:00 IST
  • உயிரிழந்தவர்களின் பெரும்பாலானவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
  • சிலிண்டர் வெடித்ததில் 10-க்கும் மேற்பட்ட படகுகள் எரிந்து சேதமாயின.

கோவா:

கோவா அர்போரா கடற்கரையில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் விடுதி ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் உள்பட 23 பேர் உயிரிழந்தனர். இதில் உயிரிழந்தவர்களின் பெரும்பாலானவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. மேலும் சிலிண்டர் வெடித்ததில் 10-க்கும் மேற்பட்ட படகுகள் எரிந்து சேதமாயின.

இந்த நிலையில், கோவா தீவிபத்து குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

கோவா அர்போராவில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 23 பேர் பலியானது மிகுந்த வேதனை அளிக்கிறது. தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல், ஆறுதல் தெரிவித்துக்கொள்கிறேன்.

தீவிபத்து குறித்து கோவா முதல்வர் பிரமோத் சாவந்திடம் கேட்டறிந்தேன். காயமடைந்தோர் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார். 

Tags:    

Similar News