இந்தியா

வெளிநாட்டு பயணியிடம் கொத்து பரோட்டாவுக்கு ரூ.1900 கேட்ட கடைக்காரர்

Published On 2024-04-16 04:15 GMT   |   Update On 2024-04-16 04:15 GMT
  • வீடியோவை பகிர்ந்து சுற்றுலா பயணி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
  • வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் கடைக்காரரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

சுற்றுலா தலங்களில் உணவு பொருட்களின் விலை மற்ற இடங்களை காட்டிலும் அதிகமாக இருப்பது சகஜம்தான் என்றாலும், இலங்கையில் சாலையோர கடை ஒன்றில் கொத்து பரோட்டாவுக்கு ரூ.1900 கேட்டதாக சுற்றுலா பயணி ஒருவர் வலைதளத்தில் பதிவு செய்திருப்பது பேசு பொருளாகி உள்ளது.

அந்த பதிவில் அவர் சமீபத்தில் இலங்கைக்கு சுற்றுலா சென்ற போது அங்குள்ள சாலையோர கடை ஒன்றுக்கு சாப்பிட சென்றுள்ளார். அப்போது கொத்து பரோட்டா விலை கேட்ட போது ரூ.1900 என கூறியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணி விலை அதிகமாக இருப்பது பற்றி கடை உரிமையாளரிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.

அதற்கு அவர் விருப்பம் இருந்தால் வாங்குங்கள். இல்லையென்றால் சென்று விடுங்கள் என கூறியுள்ளார். இதுகுறித்த வீடியோவை பகிர்ந்து சுற்றுலா பயணி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் கடைக்காரரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News