இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று மாலை திறப்பு

Published On 2023-08-27 09:16 IST   |   Update On 2023-08-27 09:40:00 IST
  • ஐந்து நாட்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளதாக திருவாங்கூர் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சிறப்பு பூஜையில் கலந்துகொள்வதற்காக பக்தர்களுக்கு முன்பதிவு நடைபெற்று வருகிறது.

திருவனந்தபுரம்:

கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரம் நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஓணம் பண்டிகை வரும் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

இந்த நிலையில், ஓணம் பண்டிகையையொட்டி, சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இன்று முதல் 31ஆம் தேதி வரை பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட உள்ளது.

தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளதாக திருவாங்கூர் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி சிறப்பு பூஜையில் கலந்துகொள்வதற்காக பக்தர்களுக்கு முன்பதிவு நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News