இந்தியா

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு.லலித் இன்றுடன் ஓய்வு பெறுகிறார்

Published On 2022-11-07 06:29 GMT   |   Update On 2022-11-07 06:29 GMT
  • சுப்ரீம் கோர்ட்டின் புதிய நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்க உள்ளார்.
  • டி.ஒய்.சந்திரசூட் நாட்டின் 50-வது சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக வருகிற 9-ந்தேதி பதவியேற்க உள்ளார்.

புதுடெல்லி:

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் கடந்த ஆகஸ்ட் மாதம் 27-ந்தேதி பதவியேற்றார். என்.வி. ரமணா ஓய்வுக்கு பிறகு அவர் அந்த பொறுப்பை ஏற்றார்.

யு.யு.லலித்தின் பணிக்காலம் நாளையுடன் நிறைவடைகிறது. ஆனால் நாளை (8-ந்தேதி) குருநானக் ஜெயந்தியையொட்டி சுப்ரீம் கோர்ட்டுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக யு.யு.லலித் கடைசியாக இன்று பணியாற்றினார்.

இதையொட்டி அவர் தலைமையில் கூடும் சிறப்பு அமர்வின் நடவடிக்கைகள் சுப்ரீம் கோர்ட்டின் வலைதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பிற்பகலில் கூடும் அமர்வில் நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், பெலா எம்.திரிவேதி ஆகியோர் இடம் பெற உள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்டின் புதிய நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்க உள்ளார். அவர் நாட்டின் 50-வது சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக வருகிற 9-ந்தேதி பதவியேற்க உள்ளார்.

Tags:    

Similar News