இந்தியா
சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள்- ஒற்றுமை சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை
- திட்டத்தில் சில நீர் விநியோக குழாய்கள், கால்வாய் அமைத்தல் மற்றும் 56 தடுப்பு அணைகள் கட்டுதல் ஆகியவை அடங்கும்.
- குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நேற்று முதல் குஜராத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளான இன்று குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
பனாஸ் கந்தா மாவட்டத்தில் உள்ள தராட் நகரத்துக்கு செல்லும் பிரதமர் மோடி ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பில் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கியும் அடிக்கல் நாட்டியும் வைக்கிறார்.
இதையடுத்து, சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை யொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் டெல்லியில் நடந்த விழாவில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார்கள்.