இந்தியா

தேர்தல் வெற்றிக்காக வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ளவில்லை- பிரதமர் மோடி

Published On 2024-03-12 07:35 GMT   |   Update On 2024-03-12 07:35 GMT
  • கடந்த 10 ஆண்டுகளில் ரெயில்வே மேம்பாட்டுக்காக எனது அரசு முன்பு செய்ததை விட 6 மடங்கு அதிகமான தொகையை செலவிட்டுள்ளது.
  • தனி ரெயில்வே பட்ஜெட் நிறுத்தப்பட்டு மத்திய பட்ஜெட்டில் சேர்த்து ரெயில்வே மேம்பாட்டுக்காக அரசின் பணம் பயன்படுத்தப்பட்டது.

அகமதாபாத்:

பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் சபர்மதி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 10 வந்தே பாரத் ரெயில் தொடங்குதல் உள்ளிட்ட ரூ.85 ஆயிரம் கோடி மதிப்பிலான ரெயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் அவர் பேசியதாவது:-

நான் எனது வாழ்க்கையை ரெயில்வே தண்டவாளத்தில் தொடங்கினேன். எனவே முன்பு நமது ரெயில்வே எவ்வளவு மோசமாக இருந்தது என்பது எனக்கு தெரியும். இந்த ஆண்டில் 2 மாதத்தில் ரூ.11 லட்சம் கோடி திட்டங்களை நாங்கள் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டியுள்ளோம்.

கடந்த 10 ஆண்டுகளில் ரெயில்வே மேம்பாட்டுக்காக எனது அரசு முன்பு செய்ததை விட 6 மடங்கு அதிகமான தொகையை செலவிட்டுள்ளது. தனி ரெயில்வே பட்ஜெட் நிறுத்தப்பட்டு மத்திய பட்ஜெட்டில் சேர்த்து ரெயில்வே மேம்பாட்டுக்காக அரசின் பணம் பயன்படுத்தப்பட்டது. இதுவரை 350 ஆஸ்கர் ரெயில்களில் 4.5 லட்சம் பேர் அயோத்திக்கு செல்ல வசதி செய்யப்பட்டது.

கடந்த தலைமுறையினர் அனுபவித்த துன்பங்களை இளைஞர்கள் அனுபவிக்கவில்லை. இது மோடியின் உத்தரவாதம். நாட்டின் முன்னேற்ற பாதைக்காகவே வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துகிறோம். இதுவே எங்களது குறிக்கோளாக இருக்கிறது.

சிலர் எங்கள் முயற்சிகளை தேர்தல் கண்ணோட்டத்தில் பார்க்க முயல்கிறார்கள். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவில்லை.

இவ்வாறு மோடி பேசினார்.

Tags:    

Similar News