இந்தியா
வருகிற 29-ந்தேதி ஆந்திரா வருகிறார் பிரதமர் மோடி
- பசுமை ஹைட்ரஜன் மையத்தில் என்.டி.பி.சி 20 ஜிகா வாட் மின்சாரம் தயாரிக்கப்படும்.
- 2 பெரிய திட்டங்கள் மூலம் 48 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தொழில் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆந்திர சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று சட்டமன்றத்தில் தொழில் துறை சம்பந்தமாக விவாதம் நடந்தது.
அப்போது முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு பேசுகையில்:-
பிரதமர் நரேந்திர மோடி வருகிற 29-ந்தேதி விசாகப்பட்டினம் வருகிறார். விசாகப்பட்டினத்தில் பசுமை பூங்கா அமைப்பதற்காக ஏற்கனவே 1200 ஏக்கரை மாநில அரசு கையகப்படுத்தி உள்ளது.
அந்த இடத்தில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பசுமை தொழில் பூங்கா அமைப்பதற்காக அடிக்கல் நாட்டுகிறார். அமோனியா மற்றும் பசுமை ஹைட்ரஜன் மையம் அமைக்கப்பட உள்ளது.
பசுமை ஹைட்ரஜன் மையத்தில் என்.டி.பி.சி 20 ஜிகா வாட் மின்சாரம் தயாரிக்கப்படும். இதன் மூலம் ஆந்திராவில் மின்சார பற்றாக்குறை தீர்க்கப்படும் என்றார்.
இந்த 2 பெரிய திட்டங்கள் மூலம் 48 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தொழில் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.