இந்தியா

டெல்லி பட்ஜெட்டை நிறுத்த வேண்டாம்- பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் கடிதம்

Published On 2023-03-21 10:19 GMT   |   Update On 2023-03-21 12:07 GMT
  • சில காரணங்களுக்காக மத்திய உள்துறை அமைச்சகம் பட்ஜெட்டை நிறுத்தி வைக்கும்படி உத்தரவிட்டது.
  • நாட்டின் 75 ஆண்டு கால வரலாற்றில் மாநில பட்ஜெட் நிறுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

டெல்லியில் கெஜ்ரிவால் அரசு இன்று பட்ஜெட் தாக்கல் செய்யும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. மணீஷ் சிசோடியாவுக்கு பதிலாக கைலாஷ் கெலாட் தாக்கல் செய்வார் என்று கூறப்பட்டது. அதன்படி பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 17-ந் தேதி தொடங்கியது. பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட இருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக மத்திய உள்துறை அமைச்சகம் பட்ஜெட்டை நிறுத்தி வைக்கும்படி உத்தரவிட்டது. இதனால் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவில்லை.

இதை தொடர்ந்து பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

டெல்லி பட்ஜெட்டை நிறுத்த வேண்டாம் நாட்டின் 75 ஆண்டு கால வரலாற்றில் மாநில பட்ஜெட் நிறுத்தப்படுவது இதுவே முதல்-முறையாகும். டெல்லி மக்கள் வருத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே பட்ஜெட்டுக்கு உள்துறை அமைச்சகம் இன்று ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 

Tags:    

Similar News