இந்தியா

மதுபாரில் ராமாயணம் வீடியோ ஒளிபரப்பு- ஒருவர் கைது

Published On 2023-04-11 15:28 IST   |   Update On 2023-04-11 15:28:00 IST
  • ராமாயணத்தின் இசையை தற்போதைய காலத்துக்கு ஏற்றாற்போல மாற்றி அதனை இழிவுபடுத்தும் விதமாக காட்சிகள் இருந்தது.
  • பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

டெல்லி நொய்டாவில் உள்ள ஒரு மதுபாரில் டி.வி.யில் பிரபலமான ராமாயணத்தை மாற்றம் செய்து அங்குள்ள திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. ராமாயணத்தின் இசையை தற்போதைய காலத்துக்கு ஏற்றாற்போல மாற்றி அதனை இழிவுபடுத்தும் விதமாக காட்சிகள் இருந்தது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மதுபான பாரை தாக்குவோம் என மிரட்டலும் விடுக்கப்பட்டது.

இதையடுத்து நெய்டா போலீசார் இது தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மதுபான மேலாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News