இந்தியா

அல்டாப் தாக்கூர்


தேசிய கொடியை மாற்றும் திட்டம்: மெகபூபா முப்தி கருத்துக்கு பா.ஜ.க. கண்டனம்

Published On 2023-01-09 02:41 GMT   |   Update On 2023-01-09 02:41 GMT
  • தேசிய கொடியையோ, அரசியல் சட்டத்தையோ மாற்றும் திட்டம் இல்லை.
  • தேசிய கொடியை தீய கண்ணுடன் பார்ப்பவர்களை கடுமையாக அணுகுவோம்.

ஸ்ரீநகர்

காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி, தற்போதைய தேசிய கொடிக்கு பதிலாக, காவி கொடியை தேசிய கொடியாக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளதாக கூறியிருந்தார்.

இதற்கு காஷ்மீர் பா.ஜனதா மறுப்பு தெரிவித்துள்ளது. காஷ்மீர் பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் அல்டாப் தாக்கூர் கூறியதாவது:-

மெகபூபா முப்தி, பிரதமர் மோடிக்கு வளர்ந்து வரும் செல்வாக்கை கண்டு விரக்தியில் பேசி வருகிறார். பா.ஜனதாவை பொறுத்தவரை, 'முதலில் நாடு, இரண்டாவது கட்சி, மூன்றாவதுதான் தனிநபர்' என்ற கொள்கையை பின்பற்றி வருகிறது. தேசிய கொடிக்காக எந்த தியாகமும் செய்ய பா.ஜனதா தொண்டர்கள் தயாராக உள்ளனர். எனவே, தேசிய கொடியையோ, அரசியல் சட்டத்தையோ மாற்றும் திட்டம் இல்லை. அப்படி சொல்வது அபத்தமானது. தேசிய கொடியை தீய கண்ணுடன் பார்ப்பவர்களை கடுமையாக அணுகுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News