இந்தியா

கைதான பெண் மந்திரவாதி ஷோபனா மற்றும் அவரது கூட்டாளி உண்ணி கிருஷ்ணன்.

கேரளாவில் மேலும் ஒரு சம்பவம்- சிறுமிகளை வைத்து பூஜை நடத்திய பெண் மந்திரவாதி

Published On 2022-10-14 10:49 IST   |   Update On 2022-10-14 10:49:00 IST
  • வசந்தி அம்மா மடத்தில் சிறுவர்-சிறுமிகள் சிலர் தங்கி உள்ளனர்.
  • சிறுவர்களை வைத்து ஷோபனா பூஜைகள் நடத்துவதும், சில நேரங்களில் மந்திரவாதம் போன்ற செயல்களில் ஈடுபடுவதும் தெரியவந்தது.

திருவனந்தபுரம்:

கேரளாவின் எர்ணாகுளத்தில் 2 பெண்களை கடத்தி நரபலி கொடுத்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் பத்தினம்திட்டா அருகே உள்ள மலையாள புழா பகுதியில் பெண் சாமியார் ஒருவர் மந்திரவாத செயல்களில் ஈடுபடுவதாகவும், அவர் சிறுவர், சிறுமிகளை வைத்து பூஜை நடத்துவதாகவும் அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் அந்த பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அக்கம் பக்கத்தினரிடமும் இதுபற்றி விசாரித்தனர்.

இதில் அந்த பகுதியில் ஷோபனா (வயது 52) என்ற பெண் வசந்தி அம்மா மடம் நடத்தி வருவது தெரியவந்தது. இந்த மடத்தில் சிறுவர்-சிறுமிகள் சிலர் தங்கி உள்ளனர். அவர்களை வைத்து ஷோபனா பூஜைகள் நடத்துவதும், சில நேரங்களில் மந்திரவாதம் போன்ற செயல்களில் ஈடுபடுவதும் தெரியவந்தது. மேலும் அடிக்கடி அங்கிருந்து மந்திர சத்தமும், சிறுவர்களின் அலறல் சத்தமும் கேட்டதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.

இந்த பூஜைகள் நடத்த ஷோபனாவுக்கு உண்ணி கிருஷ்ணன் என்பவர் உதவி செய்து வந்துள்ளார். இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். இவர்கள் பூஜை செய்த போது அங்கிருந்த சிறுவர், சிறுமிகள் சிலர் மயங்கி விழுந்ததாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News