இந்தியா

கர்நாடக சட்டசபை துணை சபாநாயகர் ஆனந்த் மாமணி காலமானார்

Published On 2022-10-23 08:21 IST   |   Update On 2022-10-23 08:21:00 IST
  • முதல்வர் பசவராஜ் பொம்மை மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆனந்த் மாமணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
  • ஆனந்த் மாமணியின் தந்தை சந்திரசேகர் எம் மாமணியும் 1990களில் துணை சபாநாயகராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக சட்டமன்ற உறுப்பினரும், கர்நாடக சட்டமன்ற துணை சபாநாயகருமான ஆனந்த் மாமணி உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்துள்ளார். இவருக்கு வயது 56.

சவுதாட்டி சட்டமன்ற தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில், முதல்வர் பசவராஜ் பொம்மை மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆனந்த் மாமணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து, பசவராஜ் பொம்மை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,"எங்கள் கட்சியின் எம்.எல்.ஏ.வும், மாநில சட்டமன்ற துணை சபாநாயகருமான ஆனந்த் சந்திரசேகர் மாமணியின் மறைவு குறித்து அறிந்து ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். அவரது ஆன்மா நித்திய சாந்தி அடையட்டும். அவரது குடும்பத்திற்கு அவரது இழப்பை தாங்கும் சக்தியை கடவுள் அளிக்கட்டும். ஓம் சாந்தி" என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனந்த் மாமணியின் தந்தை சந்திரசேகர் எம் மாமணியும் 1990களில் துணை சபாநாயகராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News