இந்தியா

இண்டிகோ விமான டிக்கெட் கட்டணம் குறைகிறது

Published On 2024-01-04 07:48 GMT   |   Update On 2024-01-04 07:48 GMT
  • கடந்தாண்டு அக்டோபர் தொடக்கத்தில் ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் விலைகள் அதிகரித்ததால் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான கட்டணங்களை ரூபாய் 300 முதல் 1000 வரை உயர்த்தியது.
  • தற்போது விலை குறைப்பு காரணமாக எரிபொருள் கட்டணம் நீக்கப்பட்டுள்ளது.

ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் (ஏடிஎஃப்) விலையில் சமீபத்திய குறைப்புக்கு பதிலளிக்கும் வகையில் இண்டிகோ நிறுவனம் கட்டணத்தில் இருந்து எரிபொருள் கட்டணத்தை நீக்கியுள்ளது.

கடந்தாண்டு அக்டோபர் தொடக்கத்தில் ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் விலைகள் அதிகரித்ததால் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான கட்டணங்களை ரூபாய் 300 முதல் 1000 வரை உயர்த்தியது. தற்போது விலை குறைப்பு காரணமாக எரிபொருள் கட்டணம் நீக்கப்பட்டுள்ளது.

ஏடிஎஃப் விலைகளின் மாறும் தன்மையைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்ப கட்டணங்களைத் தொடர்ந்து மாற்றியமைக்கப்படும் என்று இண்டிகோ தெரிவித்துள்ளது. சர்வேச மற்றும் உள்நாட்டு சேவைகளில் இந்த புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டிக்கெட் கட்டணத்தில் 300 முதல் 1000 ரூபாய் வரை குறையலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், பயணிகளின் இண்டிகோ விமான பயன்பாடு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News