இந்தியா

ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி- 28 பேர் படுகாயம்

Published On 2023-03-18 12:42 IST   |   Update On 2023-03-18 12:42:00 IST
  • தெற்கு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள பர்சூ பகுதியில் ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் விபத்து.
  • 23 பேர் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தெற்கு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள பர்சூ பகுதியில் ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் பீகாரைச் சேர்ந்த 4 பயணிகள் உயிரிழந்தனர். 28 பயணிகள் படுகாயமடைந்தனர். அவர்களில் 23 பேர் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News