இந்தியா
3-வது மாடியில் இருந்து விழுந்து காயம்: நாகபாம்புக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர்
- 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பு 3-வது மாடிக்கு சென்றது.
- எதிர்பாராதவிதமாக 3-வது மாடியில் இருந்து பாம்பு தவறி கீழே விழுந்தது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் கஜுவாக்க போலீஸ் நிலையம் அருகே அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
நேற்று காலை குடியிருப்புக்குள் நுழைந்த 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பு 3-வது மாடிக்கு சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக 3-வது மாடியில் இருந்து பாம்பு தவறி கீழே விழுந்தது.
இதில் பாம்பு படுகாயம் அடைந்து அங்கிருந்து நகர முடியாமல் கிடந்தது.
இதனைக் கண்ட அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் இதுகுறித்து பாம்பு பிடிக்கும் கிரண் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் சம்பவ இடத்திற்கு வந்து பாம்பை பிடித்து முதல் உதவி சிகிச்சை அளித்தார்.
இதையடுத்து மல்காபுரம் கால்நடை ஆஸ்பத்திரிக்கு பாம்பை கொண்டு சென்றார். அங்கு இருந்த கால்நடை டாக்டர் சுனில் பாம்பின் உடலில் தையல் போட்டு அறுவை சிகிச்சை செய்தார். பாம்பு தற்போது நல்ல நிலையில் இருப்பதாக டாக்டர் சுனில் தெரிவித்தார்.