இந்தியா

டெல்லி மெட்ரோ ரெயிலில் முத்தமழை பொழிந்த இளம் ஜோடி

Published On 2023-05-11 09:34 IST   |   Update On 2023-05-11 10:55:00 IST
  • டெல்லி மெட்ரோ ரெயிலில் ஒரு இளம் ஜோடி முத்த மழை பொழிவது போன்ற காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
  • வைரலாக பரவும் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த நெட்டிசன்கள் சிலர் அந்த ஜோடியை வெட்கமற்றவர்கள் என விமர்சித்துள்ளனர்.

டெல்லி மெட்ரோ ரெயிலில் சமீபகாலமாக நடைபெற்று வரும் சில சம்பவங்கள் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொது இடம் என்று கூட பாராமல் சில பயணிகள் அத்துமீறி பாலியல் சேட்டையில் ஈடுபட்டது, சில பெண்கள் படுகவர்ச்சிகரமாக உடை அணிந்து சென்றது போன்ற வீடியோக்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது.

இந்நிலையில் தற்போது டெல்லி மெட்ரோ ரெயிலில் ஒரு இளம் ஜோடி முத்த மழை பொழிவது போன்ற காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், மெட்ரோ ரெயிலுக்குள் தரையில் அமர்ந்திருக்கும் ஒரு வாலிபரின் மடியில் படுத்திருக்கும் இளம்பெண்ணை அந்த வாலிபர் முத்தமிட்டு கொண்டே இருக்கிறார். வைரலாக பரவும் இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த நெட்டிசன்கள் சிலர் அந்த ஜோடியை வெட்கமற்றவர்கள் என விமர்சித்துள்ளனர்.

மேலும் இந்த ஜோடி மீது மெட்ரோ ரெயில் நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளனர். இதுதொடர்பாக மெட்ரோ நிர்வாகமும் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், பயணிகள் மெட்ரோவை பயன்படுத்தும் போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். சமூகத்தில் ஏற்றுக்கொள்ள கூடிய அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். சக பயணிகளின் உணர்வுகளை புண்படுத்தும் அநாகரீகமான அல்லது ஆபாச செயலிலும் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என கூறி உள்ளது.

Tags:    

Similar News