இந்தியா

இயந்திரத்தில் கோளாறு- டெல்லி விமானம் அவசரமாக தரை இறக்கம்

Published On 2022-07-15 09:21 GMT   |   Update On 2022-07-15 11:06 GMT
  • விமானத்தின் இயந்திரத்தில் ஒரு நொடி அதிர்வுகள் காணப்பட்டதால் விமானம் ஜெய்ப்பூருக்கு திசை திருப்பி வைக்கப்பட்டது.
  • விமானத்தில் பயணித்த பயணிகள் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

புது டெல்லி:

டெல்லியிலிருந்து வதோதரா நோக்கி சென்ற இண்டிகோ விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக்கோளாறு காரணமாக ஜெய்ப்பூருக்கு திசை திருப்பி விடப்பட்டது. நேற்று டெல்லியிலிருந்து வதோதராவிற்கு சென்ற இண்டிகோ 6E-859 விமானத்தை இயக்கிய விமானிகள் விமானத்தின் இயந்திரத்தில் ஒரு நொடி அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்ததால் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக விமானம் ஜெய்ப்பூருக்கு திசை திருப்பப்பட்டது. இரவு 8.30 மணியளவில் விமானம் ஜெய்ப்பூர் சென்றடைந்தது. விமானத்தில் பயணித்த பயணிகள் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகத்தின் அதிகாரி கூறியதாவது:-

விமானத்தின் இயந்திரத்தில் ஒரு நொடி அதிர்வுகள் காணப்பட்டதால் விமானம் ஜெய்ப்பூருக்கு திசை திருப்பி வைக்கப்பட்டது. நேற்று நடந்த இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம்.

மேலும், இண்டிகோவின் போட்டி நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் தற்போது ரெகுலெட்டரி ஸ்கேனிங் கீழ் உள்ளதாக டிஜிசிஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஜுன் 19ம் தேதி முதல் விமானத்தில் இதுவரை 8 முறை கோளாறுகள் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டதாகவும் கூறினர். டிஜிசிஏ இதுகுறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்தனர்.

தொடர்ந்து, "பாதுகாப்பான, திறமையான மற்றும் நம்பகமான சேவையை தர பட்ஜெட் கேரியர் தோல்வியடைந்துவிட்டது" என்று விமான ஒழுங்குமுறை அதிகாரி கூறினார்.

Tags:    

Similar News