இந்தியா
ஆட்டை விழுங்க முயன்ற மலைப்பாம்பு அடித்து கொன்ற பொதுமக்கள்
- மலைப்பாம்பு ஒன்று மேய்ந்து கொண்டிருந்த ஆட்டின் உடலை இறுக்கி தலையை விழுங்க தொடங்கியது.
- வலி தாங்க முடியாமல் ஆடு கத்தியது. சத்தம் கேட்ட அன்னம்மா சம்பவ இடத்திற்கு சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் தலித் வாடா பகுதியைச் சேர்ந்தவர் அன்னம்மா. இவர் 10-க்கும் ஏற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்.
நேற்று காலை ஊருக்கு அருகே உள்ள வனப்பகுதியில் ஆடுகளை மேய்ப்பதற்காக ஓட்டி சென்றார்.
வனப்பகுதியில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன அப்போது 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஒன்று மேய்ந்து கொண்டிருந்த ஆட்டின் உடலை இறுக்கி தலையை விழுங்க தொடங்கியது.
இதனால் வலி தாங்க முடியாமல் ஆடு கத்தியது. சத்தம் கேட்ட அன்னம்மா சம்பவ இடத்திற்கு சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அருகில் உள்ளவர்களிடம் தகவல் தெரிவித்தார்.
அவர்கள் ஆட்டை விழுங்கி கொண்டிருந்த மலைப்பாம்பை அடித்து கொன்றனர். ஆட்டை உயிருடன் மீட்டனர்.