இந்தியா

சந்திரபாபு நாயுடு குடும்பத்தினர் கைகளை கட்டி போராட்டம்

Published On 2023-10-16 10:29 IST   |   Update On 2023-10-16 10:29:00 IST
  • தினமும் 3 முறை டாக்டர்கள் சந்திரபாபு நாயுடுவின் உடல் நிலையை பரிசோதித்து வருகின்றனர்.
  • சந்திரபாபு நாயுடு கைதுக்கு எதிராக தொடர் போராட்டம் நடந்து வருகிறது.

திருப்பதி:

தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக சி.ஐ.டி. போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

ஜெயிலில் உள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர். ஆனால் ஜெயில் அதிகாரிகள் சந்திரபாபு நாயுடுவின் உடல்நிலை நன்றாக உள்ளதாக தெரிவித்தனர்.

தினமும் 3 முறை டாக்டர்கள் சந்திரபாபு நாயுடுவின் உடல் நிலையை பரிசோதித்து வருகின்றனர்.

சந்திரபாபு நாயுடு கைதுக்கு எதிராக தொடர் போராட்டம் நடந்து வருகிறது.

சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி, மகன் லோகேஷ், மருமகள் பிராமணி ஆகியோர் நேற்று அவர்களது வீட்டில் கைகளை கட்டிக்கொண்டு நீதி கேட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எனது தந்தையை சட்ட விரோதமாக கைது செய்து நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைத்து உள்ளனர். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகின்றனர்.

உடல் நலம் குன்றிய நிலையிலும், உடல்நிலை சரியாக இருப்பதாக பொய்யான அறிக்கையை கொடுத்து அரசு மக்களை ஏமாற்றி வருகிறது என்றார்.

Tags:    

Similar News