இந்தியா

பெங்களூருவில் சுற்றுலா பயணிகளை ஏமாற்றிய டிரைவர் கைது: வைரல் வீடியோவால் சிக்கினார்

Published On 2023-09-13 07:35 GMT   |   Update On 2023-09-13 07:35 GMT
  • ஆட்டோ டிரைவர் மீட்டர் கட்டணத்தில் மோசடி செய்து வங்கதேச பயணிகளிடம் அதிக பணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளார்.
  • வீடியோ வைரலானதை தொடர்ந்து சதாசிவ நகர் போக்குவரத்து போலீசார் உடனடியாக விசாரணையில் இறங்கினர்.

வங்கதேசத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளனர். அவர்கள் பெங்களூருவில் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்த நிலையில், அங்கு ஆட்டோ ஒன்றில் ஏறி உள்ளனர். அப்போது அந்த ஆட்டோ டிரைவர் மீட்டர் கட்டணத்தில் மோசடி செய்து வங்கதேச பயணிகளிடம் அதிக பணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளார்.

இதை அறிந்து கொண்ட அந்த தம்பதியினர் சாதுர்யமாக செயல்பட்டு மீட்டர் மற்றும் ஆட்டோ டிரைவரின் நடவடிக்கைகளை வீடியோ எடுத்து, அவரின் ஏமாற்று வேலையை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

அந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து சதாசிவ நகர் போக்குவரத்து போலீசார் உடனடியாக விசாரணையில் இறங்கினர். தொடர்ந்து சுற்றுலா பயணிகளை ஏமாற்ற முயன்ற ஆட்டோ டிரைவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News