இந்தியா

உருமாறிய கொரோனா பரவல் எதிரொலி- தாஜ்மகாலுக்குள் நுழைய கொரோனா பரிசோதனை கட்டாயம்

Published On 2022-12-22 15:32 IST   |   Update On 2022-12-22 15:32:00 IST
  • தொற்றுநோய் பரவாமல் தடுக்க சுகாதாரத் துறை ஏற்கனவே சோதனைகளைத் தொடங்கியுள்ளது.
  • தொற்று எச்சரிக்கையால், பார்வையாளர்கள் அனைவருக்கும் சோதனைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

சீனா உள்ளிட்ட நாடுகளில் பிஎப்.7 என்ற உருமாறிய கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் இந்த வைரசை கட்டுப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் எதிரொலியால் நாட்டின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றான ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட சுகாதார தகவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தாஜ்மஹாலை பார்வையிட உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தினமும் அதிக அளவில் வருகின்றனர். அதிகாரப்பூர்வ உத்தரவின்படி, தொற்று நிலைமையை மனதில் வைத்து, சுற்றுலா பயணிகள் வருகைக்கு முன் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட சுகாதாரத் தகவல் அதிகாரி அனில் சத்சங்கி கூறுகையில், "தொற்றுநோய் பரவாமல் தடுக்க சுகாதாரத் துறை ஏற்கனவே சோதனைகளைத் தொடங்கியுள்ளது. தொற்று எச்சரிக்கையால், பார்வையாளர்கள் அனைவருக்கும் சோதனைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன" என்று குறிப்பட்டிருந்தார்.

Tags:    

Similar News