இந்தியா

வீட்டு பாடம் செய்யாததால் ஆத்திரம்: 5 வயது மகளை உச்சி வெயிலில் தவிக்கவிட்ட தாய்

Published On 2022-06-09 10:32 IST   |   Update On 2022-06-09 10:32:00 IST
  • வெயில் தாங்க முடியாமல் துடிக்கும் சிறுமியை பக்கத்து வீட்டு தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
  • சிறுமியின் தாய் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லி கஜூரிகாஸ் பகுதியை சேர்ந்த பெண்ணின் ஒன்றாம் வகுப்பு படித்து வரும் மகள் (5) சரிவர வீட்டு பாடம் செய்யவில்லை என்று தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், மகளின் கை மற்றும் கால்களை கயிறால் கட்டி வீட்டின் கூரையில் சுட்டெரிக்கும் வெயிலில் விட்டு சென்றுள்ளார்.

வெயில் தாங்க முடியாமல் துடிக்கும் சிறுமியின் நிலையை பக்கத்து வீட்டு நபர் அதனை தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சிறுமி வெயிலில் துடிக்கும் வீடியோவைக் கண்டு சிறுமியின் தாயை மக்கள் திட்டி தீர்க்கின்றனர்.

இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரியவந்ததை அடுத்து, சிறுமியின் தாய் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டு பாடம் செய்யாததால் பெற்ற பிள்ளைக்கே கொடூர தண்டனை வழங்கிய தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News