இந்தியா

இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தலுக்கான தடை நீங்கியது

Published On 2023-07-19 15:43 IST   |   Update On 2023-07-19 15:43:00 IST
  • மல்யுத்த கழகம் தொடர்ந்த வழக்கில் தடை விதிக்கப்பட்டது.
  • மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கவுகாத்தி ஐகோர்ட்டு விதித்த தடையை நீக்கியது.

புதுடெல்லி:

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரான பிரிஜ்பூஷன் கரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நடத்திய போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தலை நடத்த இந்திய ஒலிம்பிக் கழகம் முடிவு செய்து 3 முறை தள்ளி வைக்கப்பட்ட இந்த தேர்தல் கடைசியாக ஜூலை 16-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலுக்கு கவுகாத்தி ஐகோர்ட்டு தடை விதித்தது. மல்யுத்த கழகம் தொடர்ந்த வழக்கில் இந்த தடை விதிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கவுகாத்தி ஐகோர்ட்டு விதித்த தடையை நீக்கியது.

மல்யுத்த சம்மேளன தேர்தலை நடத்துவதில் எந்த சிக்கலும் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News