இந்தியா

"தேர்தல் பத்திரத்தின் எண்" உள்ளிட்ட முழு விவரங்களையும் வழங்க எஸ்பிஐ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

Published On 2024-03-15 06:04 GMT   |   Update On 2024-03-15 08:01 GMT
  • நன்கொடையாளர்கள் அளித்த தொகை எவ்வளவு என குறிப்பிடப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு கட்சிகளும் பெற்ற தொகை விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் பத்திர விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி எஸ்பிஐ வங்கி தேர்தல் ஆணையத்திடம் விவரங்களை ஒப்படைத்தது. அதில் நன்கொடையாளர்கள் அளித்த தொகை, கட்சிகள் பெற்றுக்கொண்ட தொகை ஆகிய விவரங்கள்தான் இருந்தது.

தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றம் "அரசமைப்பு சாசன அமர்வு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி அனைத்து விவரங்களையும் எஸ்பிஐ வங்கி தேர்தல் ஆணையத்திற்கு வழங்கவில்லை.

தேர்தல் பத்திரத்தின் எண், தேர்தல் பத்திரத்தை வாங்கிய நபர், எந்த கட்சிக்கு அவர் நிதி வழங்கியுள்ளார். எவ்வளவு பணம். டெனாமினேசன் (denomination) ஆகியவற்றை வழங்க வேண்டும். திங்கட்கிழமைக்குள் வழங்க வேண்டும். மேலும், பேப்பர் வடிவில் இருக்கும் அனைத்து தகவல்களையும் டிஜிட்டலாக்க வேண்டும்" நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், திங்கிட்கிழமை இது தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், தரவுகளை சீலிட்ட கவரில் வழங்கிய தேர்தல் ஆணையம், இணைய தளத்தில் பதிவேற்ற நகல் வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது. அதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

Tags:    

Similar News