இந்தியா

புதிய உச்சம் தொட்ட பங்கு சந்தை - முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

Published On 2024-01-15 11:14 GMT   |   Update On 2024-01-15 11:14 GMT
  • நிஃப்டி 22,115 எனும் புதிய உயரத்தை எட்டியது
  • சென்செக்ஸ் 73,402 எனும் புதிய உயரத்தை எட்டியது

ஜனவரி 15, இந்திய பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக அமைந்தது.

பங்கு சந்தையில் பதிவு பெற்ற முக்கிய நிறுவனங்களான ஹெச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ் ஆகியவற்றின் பங்குகள் உயர்வை தொட்டன.

நிறுவனங்களின் நம்பிக்கையூட்டும் காலாண்டு வருவாய், அமெரிக்க ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு எதிர்பார்ப்பு, நேர்மறையான உலக பொருளாதார குறியீடுகள், மக்களவை தேர்தலுக்கு பிறகு நிலையான ஆட்சி அமைய கூடிய சாத்தியக்கூறு உள்ளிட்டவை பங்கு சந்தையின் ஏற்றத்திற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

தேசிய பங்கு சந்தையின் (NSE) குறியீட்டு எண்ணான நிஃப்டி (Nifty), 22,053 என தொடங்கி முதல் முறையாக 22,115 எனும் புதிய உயரத்தை எட்டி, 22,097 எனும் அளவில் நிறைவடைந்தது.

மும்பை பங்கு சந்தையின் (BSE) குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் (Sensex), 73,049 என தொடங்கி முதல் முறையாக 73,402 எனும் புதிய உயரத்தை எட்டி 73,327 எனும் அளவில் நிறைவடைந்தது.

இன்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்களுக்கு சுமார் 3 லட்சம் கோடி லாபம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News