இந்தியா

அமர்நாத் யாத்திரை புறப்பட்டது முதல் குழு: கொடியசைத்து தொடங்கி வைத்த போலீசார்

Published On 2025-07-02 11:27 IST   |   Update On 2025-07-02 11:34:00 IST
  • அமர்நாத் புனித யாத்திரையின் முதல் குழு இன்று புறப்பட்டது.
  • யாத்திரையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் புனித யாத்திரை நாளை தொடங்க உள்ளது. இந்த யாத்திரை ஆகஸ்ட் 9-ம் தேதி முடிவடைகிறது.

புனித யாத்திரை வருவோரின் பாதுகாப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன.

பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடப்பதற்கு முன் அமர்நாத் யாத்திரை வருவதற்கு 2.36 லட்சம் பேர் முன்பதிவு செய்திருந்தனர்.

தாக்குதலுக்கு பிறகு முன்பதிவு எண்ணிக்கை குறைந்தது.

அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. பாதுகாப்புக்காக சுமார் 600 கூடுதல் துணை ராணுவப் படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஜம்முவிலிருந்து கடும் பாதுகாப்புடன் அமர்நாத் யாத்திரையின் முதல் குழு புறப்பட்டுள்ளது. ஸ்ரீநகர் போலீசார் மற்றும் சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

Tags:    

Similar News