இந்தியா (National)

டெல்லி காற்று மாசில் இருந்து தப்பிக்க சோனியா ஜெய்ப்பூர் பயணம்

Published On 2023-11-15 05:11 GMT   |   Update On 2023-11-15 05:11 GMT
  • ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் உள்ளதாக கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.
  • காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 தொகுதிகளுக்கும் வருகிற 25-ந்தேதி ஒரே கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

ஜெய்ப்பூர்:

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகனும் எம்.பி.யுமான ராகுல்காந்தி, கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூருக்கு நேற்று வந்தனர்.

டெல்லியில் காற்று மாசு அதிகரித்து காணப்படும் நிலையில், அதன் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்வதற்காக சோனியா காந்தி ஜெய்ப்பூருக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கே.சி.வேணுகோபாலிடம் சோனியாவின் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு டெல்லியில் காற்று மாசு நிலவுவதால் தனிப்பட்ட பயணமாக சோனியா காந்தி ஜெய்ப்பூர் வந்துள்ளதாக பதில் அளித்தார்.

மேலும் ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் உள்ளனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெல்வது உறுதி என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதனிடையே, உடல்நலப் பிரச்சனை காரணமாக 4 நாள் பயணமாக ஜெய்ப்பூருக்கு சோனியா வந்துள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 தொகுதிகளுக்கும் வருகிற 25-ந்தேதி ஒரே கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

Tags:    

Similar News