இந்தியா

ஜோதிராதித்ய சிந்தியா

விமான இருக்கையில் புகைபிடித்த சம்பவம் - விசாரணை நடத்த மந்திரி உத்தரவு

Published On 2022-08-12 02:29 IST   |   Update On 2022-08-12 02:29:00 IST
  • சமூக வலைதளத்தில் பிரபலமானவர் பாபி கட்டாரியா என்பவர்.
  • இவர் விமான இருக்கையில் படுத்தபடி சிகரெட் பற்ற வைக்கும் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது.

புதுடெல்லி:

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமானவர் பாபி கட்டாரியா. இவர் சமீபத்தில் ஸ்பைஸ்ஜெட் விமான இருக்கையில் படுத்தபடி சிகரெட்டை பற்ற வைத்து புகைபிடிக்கிறார். இந்த வீடியோ வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி அமைப்பு கூறுகையில், இதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா கூறுகையில், விதிகளை மீறி, விமானத்திற்குள் சிகரெட் புகைத்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அபாய நடத்தையை ஒருபோதும் ஏற்க முடியாது என குறிப்பிட்டார்.

Tags:    

Similar News