இந்தியா

கர்நாடகா முன்னாள் முதல்வர் எஸ்எம் கிருஷ்ணா உயிரிழப்பு

Published On 2024-12-10 06:56 IST   |   Update On 2024-12-10 07:17:00 IST
  • 1999-2004 வரை கர்நாடகாவின் முதல்வராக இருந்தார்.
  • கிருஷ்ணாவுக்கு இந்தியாவின் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். சோமனஹள்ளி மல்லையா கிருஷ்ணா, 1999 முதல் 2004 வரை கர்நாடகாவின் முதல்வராக இருந்தார்.

மே 1, 1932 இல் கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள சோமனஹள்ளியில் பிறந்த கிருஷ்ணா, வெளியுறவுத் துறை அமைச்சராகவும், மகாராஷ்டிர ஆளுநராகவும் பணியாற்றி இருக்கிறார்.

பெங்களூருவை இந்தியாவின் சிலிக்கான் வேலியாக மாற்றிய பெருமைக்குரியவராக அறியப்படும் எஸ்.எம். கிருஷ்ணா தனது 92-வது வயதில் காலமானார்.

1962 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து திரும்பிய எஸ்.எம். கிருஷ்ணா அன்று துவங்கி ஆறு தசாப்தங்கள் வரை அரசியலில் ஈடுபட்டு வந்தார். இவரது அரசியல் வாழ்க்கையை அங்கீகரிக்கும் வகையில், தான் கடந்த ஆண்டு எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு இந்தியாவின் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. 

Tags:    

Similar News