இந்தியா

திடீர் உடல் நலக்குறைவு- சிக்கிம் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி

Published On 2025-11-14 08:07 IST   |   Update On 2025-11-14 08:07:00 IST
  • முதலமைச்சர் கலந்துகொண்ட இசைப்போட்டியின் இறுதிப்போட்டியின்போது இந்த சம்பவம் நடந்தது.
  • முதலமைச்சரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.

சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரங்போ மைதானத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் பிரேம்சிங் தமாங்கிற்கு மூக்கில் திடீரென ரத்த கசிவு, உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டது. முதல்வர் கலந்துகொண்ட இசைப்போட்டியின் இறுதிப்போட்டியின்போது இந்த சம்பவம் நடந்தது.

இதையடுத்து அவர் உடனடியாக மருத்து சிகிச்சைக்காக கேங்டாக்கில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவரது மூத்த மகனும் எம்.எல்.ஏ.வுமான ஆதித்யா தெரிவித்தார். 

இதுதொடர்பாக ஆதித்யா கூறுகையில்,

மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைக்குப்பிறகு அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். அவருக்கு மூக்கில் ரத்தப்போக்கு ஏற்பட்ட வரலாறு இருந்தாலும், சாத்தியமான அபாயங்களைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

முதல்வரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.

மேலும் சிக்கல்கள் எதுவும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக அவர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என்று கூறினார். 

Tags:    

Similar News