இந்தியா

ஸ்ரீராமர் கோவிலுக்கு தினந்தோறும் 1.5 லட்சம் பக்தர்கள் வருகை

Published On 2024-03-13 10:04 IST   |   Update On 2024-03-13 11:50:00 IST
  • பக்தர்கள் 60 நிமிடத்தில் இருந்து 75 நிமிடங்களுக்குள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய முடியும்.
  • காலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும்.

அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் பகவான் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அத்துடன் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

ராமர் கோவில் திறக்கப்பட்டதில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், கோவில் அமைந்துள்ள பகுதியை சுற்றிப்பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் தினந்தோறும் ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் பேர் தினந்தோறும் தரிசனம் செய்து வருகின்றனர் என்று ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

மேலும், காலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும். ராமர் கோவில் அமைந்துள்ள இடத்திற்கு நுழைவது முதல் வெளியேறுவது வரை மிகவும் எளிமையான, வசதியான நடைமுறை செய்யப்பட்டுள்ளது.

பக்தர்கள் 60 நிமிடத்தில் இருந்து 75 நிமிடங்களுக்குள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய முடியும். செல்போன்கள், காலணிகள் உள்ளிட்டவைகளை கோவில் வளாகத்திற்கு வெளியில் விட்டுவிட்டு வர வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் பூக்கள், மாலைகள், பிரசாதம் உள்ளிட்டகைகள் ஸ்ரீ ராமர் ஜென்ம பூமி மந்திர் கொண்டு வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மங்கள ஆரத்திற்காக காலை 4 மணிக்கு, ஸ்ரீங்கர் ஆரத்திற்காக காலை 6.15 மணிக்கு, ஷயன் ஆரத்திற்காக இரவு 10 மணிக்கு அனுமதி பாஸ் உள்ளவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மற்ற ஆரத்தி பூஜைகளுக்கு அனுமதி பாஸ் கிடையாது.

இவ்வாறு ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News