இந்தியா

மூத்த காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி, பாஜகவில் இணைகிறாரா?

Published On 2024-02-18 18:21 IST   |   Update On 2024-02-18 18:21:00 IST
  • மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தை தொடர்ந்து மூத்த காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரியும் பாஜகவிற்கு தாவப் போவதாக தகவல்கள் தீப்போல பரவின.
  • லோக்சபா தேர்தலில் பஞ்சாப் மாநிலம் லூதியானா தொகுதியில் இருந்து மணீஷ் திவாரி பாஜக வேட்பாளராகவும் போட்டியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகின.

மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தை தொடர்ந்து மூத்த காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரியும் பாஜகவிற்கு தாவப் போவதாக தகவல்கள் தீப்போல பரவின. ஆனால் மணீஷ் திவாரியின் அலுவலகம் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் கமல்நாத். இவர் மத்திய பிரதேச மாநிலத்தின் முக்கிய காங்கிரஸ் தலைவர். மேலும், அம்மாநில முதல்வராக இருந்துள்ளார். இவரது மகன் நகுல் கமல்நாத். இவர்கள் இருவரும் பாஜகவுக்கு தாவ இருப்பதாக தகவல் வெளியானது. மத்திய பிரதேச மாநில அரசியலில் கடந்த சில தினங்களாக இதுதான் பரபரப்பான செய்தியாக பார்க்கப்படுகிறது.

தற்போது கமல்நாத்தைப் போல மணீஷ் திவாரியும் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேரப் போகிறார் என்ற தகவல்கள் பரவி வருகிறது.அத்துடன் லோக்சபா தேர்தலில் பஞ்சாப் மாநிலம் லூதியானா தொகுதியில் இருந்து மணீஷ் திவாரி பாஜக வேட்பாளராகவும் போட்டியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் மணீஷ் திவாரியின் அலுவலகமோ, இது அப்பட்டமான வதந்தி. நேற்று இரவு கூட காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி அவர்களது இல்லத்திலேயே மணீஷ் திவாரி தங்கியிருந்தார் எனவும் விளக்கம் கொடுத்துள்ளது.

Tags:    

Similar News