இந்தியா

இப்படி நடந்தால் எப்படி? மாணவர்களின் அந்தரங்க வீடியோக்களை செல்போனில் பதிவு செய்த பள்ளி ஆசிரியர்

Published On 2025-07-20 08:41 IST   |   Update On 2025-07-20 08:41:00 IST
  • ஆசிரியர் ஷம்புலால் தகாத், மாணவர்களின் தனிப்பட்ட வீடியோக்களை பதிவு செய்தது தெரியவந்தது.
  • புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆசிரியர் ஷம்புலால் தகாத்தை கைது செய்தனர்.

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஷம்புலால் தகாத். இவர் அந்த பள்ளியில் படிக்கும் சில மாணவர்களின் செல்போன்களில் இருந்த அந்தரங்க வீடியோக்களை, தனது செல்போனில் பதிவேற்றம் செய்துள்ளார். பின்னர் அதை வைத்து மாணவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுபற்றி அந்த மாணவர்கள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் பள்ளிக்கு திரண்டு வந்து தலைமை ஆசிரியரிடம் புகார் செய்தனர். இந்த விகாரம் பற்றி அறிந்த கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது ஆசிரியர் ஷம்புலால் தகாத், மாணவர்களின் தனிப்பட்ட வீடியோக்களை பதிவு செய்தது தெரியவந்தது. அவர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆசிரியர் ஷம்புலால் தகாத்தை கைது செய்தனர்.

தவறு செய்யும் மாணவர்களை திருத்த வேண்டிய ஆசிரியரே இப்படி நடந்தால் எப்படி? என்று சமூக வலைத்தளத்தில் பலர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News