இந்தியா

மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: ஐகோர்ட் தீர்ப்பை நிறுத்தி வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Published On 2025-07-24 12:20 IST   |   Update On 2025-07-24 12:20:00 IST
  • 2006-ல் மின்சார ரெயில்களை குறிவைத்து பயங்கரவாதிகள் குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தினர்.
  • குற்றவாளிகள் 12 பேரையும் சிறப்பு கோர்ட் சமீபத்தில் விடுதலை செய்து உத்தரவிட்டது.

மும்பை ரெயில் தொடர் குண்டு வெடிப்பில் சிறப்பு கோர்ட்டால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 பேர் மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேர் என மொத்தம் 12 பேரையும் விடுதலை செய்து மும்பை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பை வழங்கியது.

இதனையடுத்து, மும்பை ரெயில் குண்டு வெடிப்பில் சிறப்பு கோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிர அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரை விடுவித்த மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

அதே சமயம், இந்த தடை உத்தரவு குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறையில் இருந்து விடுதலையாவதைப் பாதிக்காது என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

Tags:    

Similar News