இந்தியா

ஏழுமலையான் காலடியில் வைத்து பூஜிக்கப்பட்ட மாங்கல்யம் விற்பனை

Published On 2024-01-30 10:28 IST   |   Update On 2024-01-30 10:28:00 IST
  • 2 கிராம் எடை கொண்ட தங்க தாலியை நன்கொடையாக தேவஸ்தானம் நிர்வாகம் வழங்கியது.
  • தேவஸ்தான நிர்வாகம் நடத்திய கூட்டுத் திருமணங்களில் 32,000 தம்பதிகள் மண முடித்தனர்.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தானம் சார்பில் இதுவரை 2 கிராம், 5 கிராம், 10 கிராம் எடைகளில் தங்க டாலர்களை விற்பனை செய்து வருகின்றனர்.

இனி 5 கிராம், 10 கிராம் எடையில் 4 வகையான மாதிரிகளில் திருமணத்துக்கான தங்க (மாங்கல்யம்) தாலிகளை விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ஏழுமலையான் திருவடிகளில் வைத்து பூஜிக்கப்பட்ட பின்னர், விற்பனை செய்யப்பட இருக்கும் தங்க தாலிகளை தேவையான பக்தர்கள் பணம் செலுத்தி வாங்கி கொள்ளலாம்.

கடந்த காலங்களில் கல்யாண மஸ்து என்ற பெயரில், தேவஸ்தான நிர்வாகம் நடத்திய கூட்டுத் திருமணங்களில் 32,000 தம்பதிகள் மண முடித்தனர்.

அவர்களுக்கு 2 கிராம் எடை கொண்ட தங்க தாலியை நன்கொடையாக தேவஸ்தானம் நிர்வாகம் வழங்கியது.

ஏழுமலையான், பத்மாவதி தாயார் உருவங்கள் பதிக்கப்பட்ட அந்த தங்க தாலிகளின் மகிமை காரணமாக, 32 ஆயிரம் தம்பதிகளில் ஒருவரும் மதம் மாறவில்லை என தேவஸ்தானம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News