இந்தியா

வைரலாகும் சச்சின் டீப் பேக் வீடியோ - தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுவதாக ஆதங்கம்

Published On 2024-01-15 10:42 GMT   |   Update On 2024-01-15 10:42 GMT
  • கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் ஆன்லைன் கேமை ஊக்குவிப்பது போன்ற டீப் பேக் வீடியோ இணையத்தில் வைரல்
  • தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதை பார்க்கும் பொழுது கவலையாக இருக்கிறது என ஆதங்கம்

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆன்லைன் கேமை ஊக்குவிப்பது போன்ற டீப் பேக் வீடியோ தற்போது உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது. அந்த டீப் பேக் வீடியோவில், ஒரு விளையாட்டு செயலி மூலம் சச்சின் டெண்டுல்கரின் மகள் பணம் சம்பாதித்ததாகவும், அந்த செயலியை அனைவரும் பயன்படுத்துமாறு அவர் கூறுவது போன்றும் எடிட் செய்யப்பட்டிருக்கும். இப்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்த சச்சின் டெண்டுல்கர், "இந்த வீடியோக்கள் போலியானவை. தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதை பார்க்கும் பொழுது கவலையாக இருக்கிறது என்றார். இதுபோன்ற விளம்பரங்களை யாரெனும் பார்த்தால் உடனடியாக ரிப்போட் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். மேலும் நாம் அனைவரும் சமூக வலைத்தளங்களில் விழிப்புடன் இருக்க வேண்டும். தவறான தகவல்கள் மற்றும் டீப் ஃபேக் வீடியோக்களை தடுக்க, நாம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News