ரூ.1,500 கோடி மிச்சம்.. டெல்லியில் மத்திய அமைச்சகங்களுக்கு புதிய கட்டிடம் - திறந்து வைத்த பிரதமர் மோடி
- முன்னதாக இந்த அமைச்சகங்கள் டெல்லியில் 50 வெவ்வேறு இடங்களில் பரவியிருந்தன,
- சுதந்திரத்திற்குப் பிறகும், பிரிட்டிஷ் கால கட்டிடங்களில் அரசாங்கங்கள் தொடர்ந்து பணியாற்றின என்று கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி, புதன்கிழமை டெல்லியில் உள்ள கர்தவ்ய பாதையில் 'கர்தவ்ய பவன்' கட்டிடத்தை திறந்து வைத்தார்.
கர்தவ்ய பவன் இப்போது உள்துறை அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம், MSME, DoPT, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் மற்றும் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகங்களைக் கொண்டிருக்கும்.
முன்னதாக இந்த அமைச்சகங்கள் டெல்லியில் 50 வெவ்வேறு இடங்களில் பரவியிருந்தன. அவற்றில் பெரும்பாலானவை வாடகை கட்டிடங்களில் இருந்தன.
திறப்பு விழாவில் பேசிய மோடி, பழைய நிர்வாகக் கட்டமைப்பின் குறைபாடுகளை எடுத்துரைத்தார். சுதந்திரத்திற்குப் பிறகும், பிரிட்டிஷ் கால கட்டிடங்களில் அரசாங்கங்கள் தொடர்ந்து பணியாற்றின என்று கூறினார்.
பல்வேறு இடங்களில் வாடகை கட்டிடங்களில் இயங்கும் அமைச்சகங்கள் காரணமாக, மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் roo 1,500 கோடி செலவை ஏற்க வேண்டியுள்ளது, அது இப்போது இருக்காது என்றும் அவர் கூறினார்.