இந்தியா

குடியுரிமை பெறும் முன்பே வாக்குரிமை.. பாஜக வெளியிட்ட ஆதாரம் போலி - காங்கிரஸ் சொன்ன பாயிண்ட்!

Published On 2025-08-14 20:56 IST   |   Update On 2025-08-14 20:56:00 IST
  • மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம்சாட்டினார்.
  • அமித் மால்வியா வெளிட்ட ஆதாரத்தில், '1980 ஆம் ஆண்டு- தேசிய தலைநகர் பகுதி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொண்டு பாஜவுக்காக தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டு வருவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார்.

இதற்கு பதிலடியாக " இத்தாலியில் பிறந்த சோனியாவின் பெயர் 1980-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. ஆனால், அதன்பிறகு 3 ஆண்டு கழித்தே அவர் இந்திய குடியுரிமை பெற்றார்" என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம்சாட்டினார்.

அனுராக் தாகூரின் குற்றச்சாட்டை தொடர்ந்து, பா.ஜ.க. ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மாளவியா தனது எக்ஸ் வலைதளத்தில் 1980-ம் ஆண்டு புதுடெல்லி தொகுதியின் வாக்காளர் பட்டியலின் நகலை பகிர்ந்தார்.

அமித் மால்வியா வெளிட்ட ஆதாரத்தில், '1980 ஆம் ஆண்டு- தேசிய தலைநகர் பகுதி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஆதாரம் போலியானது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் சமூக ஊடகப் பிரிவு தலைவர் சுப்ரியா ஸ்ரீனேட் வெளியிட்டுள்ள பதிவில்,

1991இல் 69-வது சட்டத்திருத்தத்தின் மூலமாக டெல்லி யூனியன் பிரதேசம்(Union Territory of Delhi), 'தேசிய தலைநகர் பகுதி'(National Capital Territory) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இது 1992 பிப்ரவரி 1 அன்று நடைமுறைக்கு வந்தது.

1980இல் இது டெல்லி யூனியன் பிரதேசமாக இருந்தது. 1992-க்குப் பிறகே டெல்லி சிறப்பு நிர்வாகம், சட்டமன்றம், அமைச்சர்கள் குழு உருவானது.

நீங்கள் தொடர்ச்சியாக பொய்களை பரப்புபவர்கள்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அமித் மாளவியா பதிவை பகிர்ந்த கேரள காங்கிரஸ், "உங்கள் போட்டோஷாப் மிகவும் நன்றாக உள்ளது. ஒரே ஒரு தவறு மட்டும் அதில் இருக்கிறது.

1991-ல்தான் 69-வது சட்டத்திருத்தம் மூலம் டெல்லி தேசிய தலைநகர் பகுதி(NCT) உருவாக்கப்பட்டது. 1980இல் டெல்லி யூனியன் பிரதேசம்.

மோடியிடம் இதைவிட நல்ல ஐடியா கொடுக்கச் சொல்லுங்கள்" என்று பதிவிட்டுள்ளது. 

Tags:    

Similar News