இந்தியா

பஞ்சாபில் பரபரப்பு: பலாத்கார வழக்கில் கைதான எம்.எல்.ஏ. துப்பாக்கியால் சுட்டு தப்பியோட்டம்

Published On 2025-09-02 16:26 IST   |   Update On 2025-09-02 16:26:00 IST
  • பலாத்கார வழக்கில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. ஹர்மீத் சிங் கைது செய்யப்பட்டார்.
  • செல்லும் வழியில் ஹர்மீத் சிங் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

சண்டிகர்:

பஞ்சாபில் முதல் மந்திரி பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அக்கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஹர்மித் சிங் பதன்மஜ்ரா. கடந்த சட்டசபை தேர்தலில் சானோர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இவர்மீது ஜிரக்பூரை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் ஹர்மீத் சிங்கை கைதுசெய்தனர்.

இந்நிலையில், காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஹர்மீத் சிங்கும், அவரது உதவியாளர்களும் போலீசாரை நோக்கி சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.

போலீசார் கஸ்டடியில் இருந்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ஹர்மித் சிங் தப்பி ஓடியது பஞ்சாபில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைமறைவாகி இருக்கும் எம்.எல்.ஏ ஹர்மீத் சிங்கை தேடும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News