இந்தியா
பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடாக இந்தியா இருக்கும்: ரிசர்வ் வங்கி கவர்னர் உறுதி
- உலக அளவிலான அரசியல் நிலவரங்கள், சவால்களை உண்டாக்கி வருகின்றன.
- நாட்டில் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்ந்து வேகம் எடுத்துள்ளன.
மும்பை :
ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டம் கடந்த மாதம் 30-ந் தேதி நடந்தது. அதில், கடனுக்கான வட்டியை 0.5 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் பேசிய உரை, நேற்று வெளியிடப்பட்டது. அதில் சக்திகாந்த தாஸ் பேசியதாவது:-
கலவையான அறிகுறிகள் தென்பட்டாலும், நாட்டில் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்ந்து வேகம் எடுத்துள்ளன. உலக அளவிலான அரசியல் நிலவரங்கள், சவால்களை உண்டாக்கி வருகின்றன.
அதையும் மீறி, நடப்பு நிதிஆண்டில், பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.