டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா (வயது86). இவர் கடந்த திங்கட்கிழமை சிகிச்சைக்காக மும்பை பிரீச்கேண்டி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் வயது முதிர்வு காரணமாக வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அவரது உடல்நிலை மோசமானதாக நேற்று மாலை தகவல் வெளியானது.இந்தநிலையில் நள்ளிரவு 12 மணியளவில் அவர் உயிரிழந்ததாக ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டது.பிரபல தொழில் அதிபரான ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பணி வகித்தவர். 2012-ல் அவர் ஓய்வு பெற்றார். இதன் பின்னர் அவர் சமூக சேவைகளில் ஆர்வம் காட்டி வந்தார். இவர் குஜராத் மாநிலத்தில் பிறந்தவர்.