இந்தியா

ராஜஸ்தானில் லாரி மீது கார் மோதி ஒரே குடும்பத்தில் 7 பேர் உயிரிழப்பு

Published On 2024-04-15 03:08 GMT   |   Update On 2024-04-15 03:08 GMT
  • காரில் 2 பெண்கள், 2 சிறுவர்கள் உள்பட 7 பேர் பயணித்தனர்.
  • நொடிப்பொழுதில் கார் முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

ஜெய்ப்பூர்:

உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் சலாசர் நகரில் உள்ள பெருமாள் கோவிலுக்கு காரில் சென்றனர்.

பின்னர் அவர்கள் கோவிலில் தரிசனத்தை முடித்துவிட்டு அரியானாவின் ஹிசார் காரில் புறப்பட்டனர். காரில் 2 பெண்கள், 2 சிறுவர்கள் உள்பட 7 பேர் பயணித்தனர். ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் அர்ஷிவாட் புலியா பகுதியில் உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது கார் டிரைவர் முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றார்.

அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக லாரியின் பின்பக்கத்தில் கார் மோதியது. இதில் காரில் இருந்த கியாஸ் சிலிண்டரில் தீப்பற்றியது. நொடிப்பொழுதில் கார் முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

இதனால் காருக்குள் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டனர். இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Tags:    

Similar News